Latest Posts
நியாயம் கேட்டவர் பெரியார்
கணவன், மனைவியை அடிமையாக நடத்தக்கூடாது என்று கூறிய பெரியார், ‘பிராமணர்’களுக்கு மற்றவர்கள் அடிமையாக இருக்க ஒத்துக்கொள்வார் என்று கருத இடமேது? அதனால்தான் என்றைக்கும் பிராமணர்கள் மற்ற வகுப்பார் மீது குதிரை ஏறலாம்; அதற்குத் தமிழன் தோள் என்றைக்கும் தயாராக இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம் என்றார்.
ஆதிக்க வெறுப்பு
பார்ப்பன ஆதிக்கத்தை மட்டுமே பெரியார் கண்டிக்கவில்லை. சைவ சமய ஆதிக்கத்தையோ, வைணவ சமய ஆதிக்கத்தையோ தமிழர்களான மடாதிபதிகளின் ஆதிக்கத்தையோ பெரியாரவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. திருக்கோயில் பெயரால் உருவாக்கப்பட்டு நடைபெறும் ஆண்டவன் ஆதிக்கத்தைக்கூட கொள்கை நோக்கிப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.
தன்மான உணர்வூட்டியவர்
தந்தை பெரியார் அவர்கள் தோன்றியிராவிட்டால், அவரது சுயமரியாதை முழக்கம் கேட்காமலிருந்தால், பேரறிஞர் அண்ணா அவர்கள் இல்லை; அவரது வழிகாட்டுதலும், அறிவுத் தொண்டும், அரசியல் பணியும் நமக்குக் கிடைத்திருக்காது.
சமுதாய அடிப்படை மாற்றம்
பெண்ண்டிமை நிலை மாறவும், கலப்புத் திருமணமும் – விதவை மணமும் ஏற்கப்படவும் அவர் ஆற்றிய தொண்டு பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகோலின. உழைப்பவர்கள் உருக்குலையவும் வறுமையில் வாடவும், உழைக்கதவர்கள் உண்டு கொழுத்து ஆதிக்கம் செலுத்தவுமான நிலையை எதிர்ப்பதற்கான மனத்துணிவை மக்களிடம் தந்தை பெரியார் உருவாக்கினார்.
கருத்து வேற்றுமையை மதித்தவர்
மக்கள் பலர் தமது கருத்தினைக் காது கொடுத்துக் கேட்கிறார்கள் என்பதே அவரது களைப்புக்கு மருந்து. அவர்கள் தமது கொள்கையைச் சிந்திக்கின்றார்கள் – ஏற்க முற்படுகிறார்கள் என்பதே அவருக்குத தேன். அதுவே அவரது முதுமையில் அவர் பருகிய இளமையின் பால்.
மக்களைத் தேடி சென்ற முதல் தலைவர்!
பெரியார் அவர்களின் அறிவுக் கூர்மையானது; சுறுசுறப்பானது; நினைவாற்றல் மிக்கது; ஓய்வை ஏற்காதது; எப்பொழுதும் எதையாவது படித்துக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ தான் இருப்பார். புதிது புதிதாக அறியக் கூடியவற்றை அறிந்து – தெளிவதிலே அவருக்குப் பேரார்வம்.
அனுபவ அறிவு
செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போன்று, எண்ணங்களும் மனப்பழக்கமாவதால், அந்த எண்ணங்களினின்றும் புதிய எண்ணங்களைச் சிந்திப்பது என்பது இயற்கையில் எளிதல்ல. பாடங்கேட்டுப் பழகாத அவரது மனம் புதிதாகத் தோன்றக் கூடிய எண்ணங்களைப் பழைய எண்ணங்கட்கு அடிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆட்படவில்லை.
இயற்கையிலேயே சுதந்திர உணர்வு
செல்வச் சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவராதலால், பிறர் தயவில், ஆதரவில் வாழவேண்டிய நிலைக்கு என்றும் ஆளாகாதவர் பெரியார். சிறு வயது முதலே எதையும் – தமது அறிவுக்குட்பட்ட வகையில் ஆராயும் மனப்பான்மை கொண்டவர். ஒருவகையில் இயற்கையிலேயே ‘சுதந்திர’ உணர்வு கொண்டவர். மற்றவர்கட்கு அஞ்சுவதும், அடங்குவதும், கட்டுத் திட்டங்களை ஏற்பதும் அவருக்கு இயல்பல்ல.
தமிழினத் தந்தை!
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஈரோடு நகரில் பிறந்து வளர்ந்த (பெரியார்) ஈ.வெ. இராமசாமி அவர்கள் இன்று தமிழ் நாட்டு மக்களின் வாழ்விலும் எண்ணத்திலும் ஒரு புதிய விழிப்புணர்வையும் மாற்றத்தையும் உருவாக்கி, அறிவுப் புரட்சிக்கு வழிவகுத்து, மக்கள் தன்னம்பிக்கை கள்ளச் செய்தவராக விளங்குவதால், வரலாற்றில் போற்றிக் குறிப்பிட வேண்டிய ஒரு புதிய சகாப்தம் (புதிய நூற்றாண்டு) படைத்தவர் … Continued
வெண்தாடி வேந்தர் தொடுத்த அறப்போர்
ஏடா! தமிழா! ஏனடா பிறந்தாய்! வாடா, போடா, எனினும் ஏற்கலாம். மூடா, எனினும் தவறிலை பொறுத்தல்; ஆடா? மாடா? பிறவியில் இழிந்திட!