ஆரிய சூழ்ச்சி வலையினின்று விடுவிக்கத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். இங்கிலாந்து நாட்டிலே தோன்றிய புரட்சிக் கவிஞன் ஷெல்லி இங்கிலாந்து நாட்டு அடித்தட்டு உழைப்பாளி மக்களைக் கூவி அழைத்துக் கூறியது இது;
”உரத்த குரலில் முழங்குங்கள்!
ஊழல் கொடுமை வளர்க்கும் அரியாசன்த்தின் கீழ்ச்
சிக்குண்டு நலியும் அடிமை ஒவ்வொருவனும்
மனிதனாகத் தலை நிமிரட்டும்!
பூட்டப்பட்டுள்ள தளைகளையும் விலங்குகளையும்
துன்பத்தின் முனகல் ஒலி இன்றியே
துணிச்சலுடன் உடைத்தெறியட்டும்!”
மேலும் ஷெல்லி சொன்னான்.
”சுதந்திரம் எதுவென்பதும் அறியீர்!
அடிமை நிலை பற்றியே அறிவீர்!
அந்நிலையிலேயே நெடுநாள் ஊறினீர் அன்றோ!
அடிமைப் பெயரே உந்தம் பெயரோடு
ஒன்றாக உறவாடி எதிரொலிப் பதன்றோ!”
ஆம், இவ்வாறுதான் கேட்டான்!
இங்கிலாந்து நாட்டு குடிமகனே!
உன் பெற்றோர்களும் -பிள்ளைகளும், நாளும் வறுமையில் வாடிச் செத்திட விட்டு ஏங்கித் தவிப்பதா உரிமை வாழ்வு? அடிமைத்தளையை உடைத்தெறிய நீ தலைநிமிர மாட்டாயா? என்றான் அவன்.
வறுமைநிலை கண்டே கொதித்தான் அவன். ஆனால், சமுதாய நிலையே – அடிமை நிலையாக ஆக்கப்பட்டுள்ள இங்கோ – பெரியார் அவர்கள் அந்த அளவு ஆத்திர்ப்படவில்லை. நியாயத்தை உணர்த்துவதற்குத்தான் வாழ்நாளெல்லாம் வாதாடினார்.
அதைப்போலவே, பிரஞ்சுநாட்டு ரூசோ கூறினான். மனிதன் பிற்கின்றபோது, சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால், உலகில் எங்கெங்குக் காணினும் அவன் கைகள் விலங்கு பூட்டப்பட்டுக் கிடக்கிறான் என்று.
மனிதன் பிறக்கின்றபோது, சுதந்தரமாகத்தான் பிறந்தான். எண்ணங்களாலே விலங்கு பூட்டப்பட்டான். அந்த எண்ணங்களைப் பற்றியெல்லாம் தந்தை பெரியாரவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார். எனவே பருவம் பார்ப்பதும், மடி செய்வதும் தமிழன் குடிசெய்வதற்கு இடையூறு என்று வள்ளுவர் கூறிய குறள் கருத்து அடிப்படையில் – தமிழர்கள் முன்னேற மூடநம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும் என்று தந்தை பெரியாரவர்கள் பருவம் பாராது, காலம் நோக்காது, கருமமே கண்ணாகப் பணியாற்றினார்கள்.
paventhan
nandri, vaazha thravida kazhagam.