”மனிதனை மனிதன் நெருங்க்க் கூடாது – காணக்கூடாது – தீண்டக்கூடாது” – என்கிறார்களே. யார் அவர்கள்? என்றார் பெரியார்.
”மேல்சாதிக்கார்ர்கள்’ என்ற பதில் வந்தது.
அப்படி மனிதனை மனிதன் இழிவுபடுத்த ஒரு மேல்சாதியா? அந்த மேல்சாதிக்கார்ன் வளர்க்கும் மாடுகளிலும் கீழோ மனிதன்? நாயினும் இழிந்தவனோ மனிதன்? அந்த மேல்சாதி ஒழிக என்றார். அவர்கள் மற்ற மனிதர்களை இழிவுபடுத்தும் அநீதியைக் கண்டித்தார்.
இது வருணாசிரம தருமம் அல்லவோ? நால்வகைச் சாதி முறையைத்தானே நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்? அதுவும் தவறா? என்றனர், வருணாசிரம மனப்பான்மையினர்.
அது எப்படி உண்மையாகும்? பிறப்பிலே உயர்வும் தாழ்வும் இயற்கையில் எப்படி இருக்க முடியும்? அது செயற்கைகயாக்க் கற்பிக்கப்பட்டதுதானே! சாதிப்பாகுபாடே ஒரு சூழ்ச்சிப்பொறி, முறைகேடு, அநீதி என்றார் பெரியார்.
அதுவே, வேதமும் ஆகமங்களும் கீதையும் உணர்த்திடும் உண்மை, – கண்ணன் படைப்பு நால்வகைச் சாதி என்றனர்.
அந்த வேதமும் கீதையும் அறிவுக்கு ஒத்தனவல்லவே? அவை உரைக்கும் கருத்து ஆரியத்தைக் காக்க வகுக்கப்பட்ட சதித்திட்டம் அதை ஏற்பது மடமை – எதிர்ப்பதே என் கடமை என்றார் பெரியார்.
இதிகாசங்கள் முதற்கொண்டு மனுநீதி சாத்திர்ம வரையில் வற்புறுத்தும் முறையாயிற்றே வருணாசிரம்ம் என்றனர். அதனால்தானே தமிழர்கள் அடிமைகளாக, தாசர்களாக ஆக்கப்பட்டனர். எனவே, அவற்றை ஒழித்தால்தான் – தமிழன் தலைநிமிர முடியும் என்றார் பெரியார்.
இவையெல்லாம் கடவுளின் ஏற்பாடு செய்தவன் கடவுளாகமாட்டான். இப்படிப்பட்ட கட்டளை இடுவது தெய்வம் ஆகாது. இதை மீறுவது பாவம் என்றால் நான் அதனை ஏற்கத் தயார்! என்றார் பெரியார்.
இதுதான் நாத்திகம், கடவுளை நம்பாதவர் பேச்சு என்றனர், ஆத்திகர்.
இப்படிப்பட்ட பேதங்களை வளர்க்கும் கடவுளை நம்பிவதைவிட, நாத்திகனாக இருப்பதே மேல்; நான் நயவஞ்சக ஆத்திகனாக இருக்க விரும்பவில்லை – என்றார் பெரியார்.
இப்படியெல்லாம் கடவுள் நிந்தனை செய்பவர்கட்கு இரவுரவாதி நரகந்தான் சம்பவிக்கும் என்றனர் வைதிகர்கள்.
சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு, பிறப்பிலே இழிவை ஏற்றுக்கொண்டு கண்ணுக்குத் தெரிந்த இவ்வுலகில் கருத்தறிந்தும் அநீதியை ஏற்றுக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக அழிவதைவிடக் கண்ணுக்குத் தெரியாத – யாருங்காட்டாத இரவுரவாதி நரகம் எவ்வளவோ மேல் என்று சுடச்சுடப் பதில் அளித்தார் பெரியார்.
Leave a Reply